கோவை குண்டுவெடிப்பு கைதி சிறையில் திடீர் மரணம்
கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சபுர் ரஹ்மான் என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சபுர் ரஹ்மான் (38). இவருக்கு கடந்த 24ம் தேதி ஆயுள் தண்டனை மற்றும் 17 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நேற்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில், ரஹ்மான் உயிரிழந்தார்.
உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு:
அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை ரஹ்மானின் உறவினர்கள், நூற்றுக்கணக்கான தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
சிறை டாக்டரின் அலட்சியத்தால்தான் ரஹ்மான் உயிரிழந்துள்ளார். அவரைக் கைது செய்ய வேண்டும். ரஹ்மான் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதனப்படுத்தினர். அதன் பின்னர் ரஹ்மானின் உடலை அவரது உறவினர்களும், தமுமுகவினரும் பெற்றுச் சென்றனர். இதனால் பதட்டம் தணிந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications