தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை
தூத்துக்குடி: பரீட்சையை சரியாக எழுதாததால் வருத்தமடைந்த கல்லூரி மாணவவி தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள இடையர்காடு தெற்குத் தெருவை சேர்ந்தவர் குலேந்திரன். இவருக்கு செல்வி என்ற மனைவியும் சுகந்தி என்ற மகளும் இருக்கிறார்கள்.
சுகந்தி தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். எல்லாப் பாடங்களிலும் செமஸ்டர் தேர்வு நன்றாக எழுதியிருந்த இவர் எலக்ட்ரானிக்ஸ் தேர்வை மட்டும் சரியாக எழுதவில்லையாம்.
இதனால் தேர்ச்சி அடையாமல் போய் விடுவேனோ என்று தனது தாயிடம் புலம்பியபடி இருந்தார். அவரை தாயார் தேற்றி ஆறுதல் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பாத்ரூம் செல்வதாக தாயிடம் கூறிச் சென்ற அவர் பின்னர் திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் மகள் வராததை கண்டு சந்தேகமடைந்த செல்வி பாத்ரூமுக்குள் சென்று பார்த்தபோது சுகந்தி சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications