கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் திட்டமிட்ட சதி: இளங்கோவன்
மதுரை: காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதலில் சதித் திட்டம் அடங்கியுள்ளதாக மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணசாமியை, மத்திய அமைச்சர் இளங்கோவன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாகவே சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுப் போய் விட்டது.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை மட்டும் குறி வைத்து தற்போது தாக்குல் நடந்துள்ளது. இதைப் பார்க்கும் திட்டமிட்ட சதிச் செயலாக இது இருக்கும் என ஐயம் எழுகிறது.
தமிழகத்தில் வெடிகுண்டுக் கலாச்சாரம் வளர்ந்து விட்டது. விரும்பத்தகாத பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையை கட்டுப்படுத்தி ஒடுக்க வேண்டியது திமுக அரசின் கடமையாகும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளது, அவரது சொந்தக் கருத்தாகும்.
போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமியின் வாகனம் சென்றதால்தான் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டதாக முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்தில் எந்தப் பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதி அல்ல. அரசியல் தலைவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமையாகும்.
இதுபோல அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது, தீய சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பது போலாகி விடும். இது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் மாறி விடும். போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றார் இளங்கோவன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications