சென்னை விமான நிலையத்தில் வைரங்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாங்காக்கில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட வைரங்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த நந்தகோபால் (38)என்பவர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்தார். இவர் தனது கையில் வைத்திருந்த 2 பெட்டிகளுடன் கிரீன் வே மூலம் வெளியேற முயன்றார்.
அவரின் அவசரத்தை பார்த்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரணை செய்தனர். அதற்கு அவர், என்னிடம் வரி செலுத்தும் அளவுக்கு எந்த பொருளும் கிடையாது. நான் வைத்திருக்கும் மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.5,000ஐ கூட தாண்டாது எனக் கூறியுள்ளார்.
இருப்பினும் அவரது 2 பெட்டிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்ததில் எதுவுமில்லை என்று தெரிய வந்தது. அப்போது நந்தகோபால், உடனே சோதனையை முடிக்குமாறு அவசரப்படுத்தியுள்ளார்.
இதனால் அதிகாரிகளுக்கு அவர் மீது மீண்டும் சந்தேகம் வந்தது. அவருடைய 2 சூட்கேஸ்களையும் திறந்து பார்த்தனர். அதில் இரண்டு நூடுல்ஸ் பாக்கெட்களும், உடைகளும் மட்டும் இருந்தன. அவர் வைத்திருந்த நூடுல்ஸ் பாக்கெட்டை உடைத்து பார்த்ததில் உள்ளே நூடுல்ஸ்களுக்கு பதிலாக கார்பன் பேப்பர்களில் வைரம், வைடூரியம், முத்து, பவளம் போன்ற விலையுயர்ந்த கற்கள் இருந்தன.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நந்தகோபாலை கைது செய்து விசாரித்ததில், திருச்சியை சொந்த ஊராக கொண்ட அவர், கடந்த சில வருடங்களாக ஜெய்ப்பூரில் தங்கியிருப்பது தெரியவந்தது. இவர் நீண்ட நாட்களாக இதே போன்று வைரங்களை கடத்தி வருவதாகவும், கடத்தி வந்த இந்த வைரங்களை சென்னையில் ஒரு நபரிடம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடத்தி வரப்பட்ட வைரங்களின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications