ஜாதிக் கலவரத்தில் ஆசிரியர் கொலை - அரசு நிதியுதவி
ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் நடந்த ஜாதிக் கலவரத்தில் கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ் குமார் கூறியுள்ளார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்னர் முதுகுளத்தூரில் நடைபெறவிருந்த முப்பெரும் விழாவிற்கு காரில் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை 50 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கண்மூடித்தனமாக தாக்கி வயிற்றில் வேல் கம்பால் குத்தியது.
இதையடுத்து முதுகுளத்தூரில் இரு ஜாதியினருக்கிடையே மோதல் வெடித்தது. இதில், வின்சென்ட் சாலமன் என்ற பள்ளி ஆசிரியர் குத்தப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த நிலையில், ஆசிரியர் வின்சென்ட் சாலமன் குடும்பத்துக்கு தமிழக அரசு ஊழியர்கள் குடும்பநல மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக என மாவட்ட கலெக்டர் கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பாக சாலமன் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதியும் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
