கேஸ் விமானத்தை இயக்க கத்தார் ஏர்வேஸ் திட்டம்
துபாய்: உலகிலேயே முதல் முறையாக கேஸ் மூலம் இயங்கும் விமானத்தை இயக்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக கத்தார் கேஸ் மற்றும் ஷெல் ஆகிய இரு நிறுவனங்களுடனும் கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான விரிவான விவரங்களை அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் விமானக் கண்காட்சியின்போது வெளியிடவுள்ளதாகவும் கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இந்தப் புதுமைத் திட்டம் குறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர் அலி அல் ராய்ஸ் கூறுகையில், இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி விமானங்களை இயக்குவது குறித்து கத்தார் கேஸ், ஷெல் ஆகிய நிறுவனங்களுடன் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் வகையிலான எந்திரங்களைத் தயாரிப்பது குறித்து கத்தார் கேஸ் மற்றும் ஷெல் நிறுவனங்கள், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உலகின் முதல் விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் விளங்கும். இதை நனவாக்குவதற்காக எங்களது பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் முழு வீச்சில், ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்துக் கொண்டுள்ளனர்.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் புதிதாக 150 விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். இதில் 5 விமானங்கள், டபுள் டெக்கர் சூப்பர் ஜம்போ ஏ-380 விமானங்களும் அடக்கம் என்றார் அவர்.
கத்தார் நாட்டில் 910 டிரில்லியன் கன அடி கேஸ் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications