புலிகளின் புதிய அரசியல் தலைவராக நடேசன் நியமனம்

Subscribe to Oneindia Tamil

Natesan with Tamilselvanகிளிநொச்சி: விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய அரசியல் தலைவராக, அமைப்பின் காவல்துறைத் தலைவரான பி.நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் நேற்று அதிகாலையில் நடந்த இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் 5 பேரும் கொல்லப்பட்டனர்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் ஈழப் பகுதியில் பெரும் சோகமும் நிலவுகிறது.

இந்த நிலையில், புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக, காவல்துறைத் தலைவராக தற்போது பணியாற்றி வரும் பி.நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு புதிய தலைவராக பி.நடேசனை நியமித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைத் தலைவர் பொறுப்பிலும் நடேசன் தொடருவார் என புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+