தமிழ்ச்செல்வனுக்கு பிரபாகரன் அஞ்சலி
கிளிநொச்சி: இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்ச் செல்வன் உடலுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
கிளிநொச்சியில் உள்ள தமிழ்ச் செல்வனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ச் செல்வன் மற்றும் அன்புமணி (அலெக்ஸ்) ஆகியோரின் உடல்களுக்கு பிரபாகரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவர்களின் உடல் மீது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடி போர்த்தப்பட்டிருந்தது.
4 நாள் துக்கம்:
தமிழ்ச்செல்வன் மரணத்தையடுத்து 3 நாள் தேசிய துக்கத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள ஈழப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 பேரின் படங்களும் வைக்கப்பட்டு அவற்றுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாடல்களும் இசைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications