நகராட்சி தலைவர், ஆணையரை கொல்ல கூலிப்படை - கடிதத்தால் பரபரப்பு
நாகப்பட்டினம்: நாகை நராட்சித் தலைவர், ஆணையரை கொல்ல கூலிப்படைகள் அமைக்கப்படுள்ளதாக வந்த மொட்டை கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை நகராட்சி தலைவராக இருப்பவர் சந்திரமோகன், நகராட்சி ஆணையராக இருப்பவர் விஜயகுமாரும் இருக்கிறார்கள்.
நாகூரில் இருந்து நகராட்சி ஆணையருக்கு ஒரு கடிதம் வந்ததுள்ளது. அதில் சந்திரமோகனையும், விஜயகுமாரையும் கொலை செய்ய கூலிப்படைகள் அனுப்பப்பட்டு நாகையில் முகாம் இட்டுள்ளனர்.
சந்திரமோகனை கார் வெடிகுண்டு மூலம் கொல்ல உள்ளனர். விஜயகுமாரை வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப் போகின்றனர்.
அதற்கான திட்டம் சென்னையில் உள்ள ஒரு பிரபல அரசியல் தலைவர் மூலம் வகுக்கப்பட்டு உள்ளது. அதற்கான தொகை கூட கொடுக்கப்பட்டு விட்டது. அலட்சியம் வேண்டாம், உயிர் போனால் மீண்டும் வராது என கூறப்பட்டு இருந்தது.
கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் இது குறித்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரில் தனக்கும் நாகை நகராட்சி என்ஜீனியராக பணியாற்றிய செல்வராஜுக்கும் முன் விரோதம் இருந்ததாகவும், அவர் மீது சில குற்றச்சாட்டுகள் காரணமாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அனால் அவர் தான் இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து இருந்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜ் கையெழுத்தையும், கடித்தில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்த்து, அதை கைரேகை பிரிவு சோதனைக்கு அணுப்பி உள்ளனர். இந்த கடிதத்தால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications