தமிழ்ச்செல்வன் மறைவு புலிகளுக்கு பின்னடைவு இல்லை: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

Tirumavalavanசென்னை: விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவால் விடுதலைப்புலிகளுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை, தி.நகரில் உள்ள அந்த கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரது மறைவு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக தமிழர்களுக்கு இழப்பாகும். ஈழப்பிரச்சனையில் அரசியல் தீர்வே இறுதியானது என்று சொன்னவர் தமிழ்ச்செல்வன்.

அவரது இழப்பால் விடுதலைப்புலிகளுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைப்போம்.

மனித நேயமற்ற சிங்கள இனவெறியர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+