தமிழன் என்பதால் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல்: கருணாநிதி
சென்னை: ஒரு தமிழன் என்பதால், எனது உடலில் ஓடுவது தமிழ் ரத்தம் என்பதால், தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்தேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பதிலும் வருமாறு:
கேள்வி: தமிழ்ச்செல்வன் மறைவுக்கு நீங்கள் மனிதாபிமானத்துடன் இரங்கல் தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதா அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று கூறியிருக்கிறாரே
பதில்: ஆட்சியில் இல்லாத காரணத்தால், ஆத்திரத்தில் அல்லல்படுகிறார். எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் மறைந்தாலே இரங்கல் தெரிவிப்பது மனித நேயப் பண்பாடு என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தெரியும்.
அந்த அடிப்படையில் தான் அதிமுகவிலே இருந்த நாவலர் நெடுஞ்செழியன் மறைந்த போது கூட நான் தேடிச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன்.
இலங்கையிலே கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடலில் ஓடுவது தமிழ் ரத்தம். எனவே தான் என்னுடைய இரங்கலை நான் தெரிவித்தேன்.
ஜெயலலிதாவுடன் இன்றளவும் தோழமை கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று வந்த மதிமுக தலைவர் வைகோ, தமிழ்ச்செல்வன் மறைவுக்காக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து கண்டிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தால் அதற்கு ஜெயலலிதா ஒப்புதல்.
அதே தமிழ்ச்செல்வன் மறைவுக்காக நான் அறிக்கை விடுத்தால் என்னுடைய ஆட்சியைக் கலைக்க வேண்டுமா. எப்படியாவது ஆட்சி கவிழ்க்கப்படாதா. தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து சுரண்ட முடியாதா என்று ஜெயலலிதா தவியாய் தவிக்கிறார். என்ன செய்வது. ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் மக்கள் ஆதரவு வேண்டுமே என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதேபோல, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications