தென் மாவட்டங்களில் பார்வர்டு பிளாக் பந்த்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தேவர் சிலை உடைப்பை கண்டித்தும், அதனை கண்டித்து மறியல் செய்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டித்தும் தென் மாவட்டங்களில் உண்ணாவிர போராட்டம் மற்றும் ஒரு நாள் பந்த் நடத்தப்படும் என்று பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சேதுராம பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருநெல்வேலி மாவட்டம், வேலாயுதபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினரிடம் பேசி வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது. இந்த வேளையில் அப்பாவி மக்களை போலீசார் தடியடி நடத்தி தாக்கியும், அவர்களை மிதித்தும் கொடுமை செய்து 26 பேரை கைது செய்துள்ளனர்.
உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைக்க ஒத்துக் கொண்ட நிலையில் அப்பாவி மக்கள் 26 பேரையும் விடுவிக்க சொன்னதற்கு, காவல்துறை உயர் அதிகாரிகள் மறுத்து வி்டடனர். இதற்கு காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலை உடைப்பு, அப்பாவி மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது, சமீபகாலமாக போலீசார் திட்டமிட்டு குறிப்பிட்ட பிரிவினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வது போன்றவற்றை கண்டித்து தென் மாவட்டங்களில் ஒரு நாள் பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கு முன்னர் நெல்லையில் உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
எங்கள் கட்சியின் மாநில தலைவர் கார்த்திக்குடன் கலந்து பேசி உண்ணாவிரதம் மற்றும் பந்த் ஆகியவற்றுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications