காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: மழை நீடிக்கும்
சென்னை:
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து விட்டது. ஆனாலும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நேற்று முன் தினம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்
அறிவித்திருந்தது.
இந் நிலையில் சென்னையில் நேற்று முழுவதும் நல்ல மழை பெய்தது. இதனால் நகரின் பல முக்கிய சாலைகளில் ஆறு போல மழை நீர் ஓடியது. வாகனங்களில் சென்றோர் குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
சனிக்கிழமை இரவிலும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை கொட்டியது. புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மதுரையில் பெய்த கன மழை காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலில், ஆடி வீதியில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது.
நெல்லை மாவட்டத்தில் கன மழை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடனாநதி, அடவிநயினார், குண்டாறு, ஆகிய அணைகள் நிரம்பி விட்டன. இன்னும் பல அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
அந்த மாவட்ட அணைகளில் நீர் மட்ட விவரம்:
பாபநாசம் - 120.70 அடி
சேர்வலாறு - 133.10 அடி
மணிமுத்தாறு - 68.90 அடி
கடனாநதி - 83 அடி
ராமநதி - 79.50அடி
அடவி நயினார் - 132.22 அடி
கருப்பாநதி - 54.14 அடி
குண்டாறு - 36.10 அடி
நம்பியாறு - 17.14 அடி
கொடுமுடியாறு - 48
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications