திருச்சி தி.க கூட்டத்தில் ராமர் வாழ்க கோஷம்
திருச்சி: திருச்சியில் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற சேது சமுத்திர திட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் ராமர் வாழ்க, சேது சமுத்திர திட்டம் ஒழிக என்று கோஷம் எழுந்ததால் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகர திராவிட கழகம் சார்பில் சேது சமுத்திர திட்ட விளக்க பொதுக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர திக தலைவர் சேகர் தலைமை தாங்க செயலாளர் செந்தமிழ் இனியன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் சேது சமுத்திர திட்டம் மற்றும் அதனுடைய பயன்கள் குறித்து தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த பொதுக்கூட்டத்தை ஏராளமானோர் நின்று கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று ராமர் வாழ்க, சேது சமுத்திர திட்டம் ஒழிக என்று கோஷம் எழுப்பினார்.
இதனால் தி.க பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தி.க நிர்வாகிகள் அந்த வாலிபரை அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications