முஷாரப் குறித்து பாகிஸ்தானில் பரபரப்பு வதந்தி!
இஸ்லாமாபாத்: அவசர நிலையை எதிர்க்கும் ராணுவ அதிகாரிகளால், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை முஷாரப் மறுத்துள்ளார்.
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் பெரும் அதிருப்தியும், அவஸ்தையும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று பாகிஸ்தானை ஒரு பரபரப்புச் செய்தி கலக்கியது. அவசர நிலை முடிவை விரும்பாத சில ராணுவ அதிகாரிகள், முஷாரப்பைக் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அந்த செய்தி கூறியது.
இதனால் பாகிஸ்தான் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் உள்ளநகரங்களில் உள்ள பத்திரிக்கை அலுவலகங்களுக்கு மக்கள் போன் செய்து இது உண்மையா என்று கேட்டவண்ணம் இருந்தனர்.
இந்த செய்தியால் கராச்சி பங்குச் சந்தையில் ெபரும் வீழ்ச்சி காணப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை முஷாரப் மறுத்து விட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையிலிருந்து அவர் பேசுகையில், என்னை யாரும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. இது மிகப் பெரிய ஜோக்.
சற்று நேரத்திற்கு முன்புதான் நான் 80 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுத் தூதர்களை அழைத்து அவசர நிலை குறித்து விளக்கினேன் என்றார்.
இதன் மூலம் முஷாரப் குறித்த செய்தி வதந்தி என்று தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications