சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட லண்டன்-பெங்களூர் விமானம்
பெங்களூர்: பெங்களூரில் மோசமான வானிலை நிலவியதையடுத்து லண்டனில் இருந்து பெங்களூர் வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
லண்டனில் இருந்து நேற்றிரவு கிளம்பிய அந்த விமானம் இன்று காலை 8.30 மணிக்கு பெங்களூரில் தரையிறங்க இருந்தது. ஆனால், பெங்களூரை அடைந்த பின் அந்த விமானத்தால் அங்கு தரையிறங்க முடியவில்லை.
வானிலை மிக மோசமாக இருந்ததால் அந்த விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. இதையடுத்து 9 மணிக்கு அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது. பயணிகளும் விமானிகளும் இறங்கிவிட்டனர்.
10 மணிக்கு மேல் பெங்களூரில் வானிலை சரியாகிவிட்டது. ஆனாலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விதிமுறையால் அந்த விமானம் மீண்டும் உடனடியாக பெங்களூக்குக் கிளம்பவில்லை.
'விதியால் நொந்த பயணிகள்':
நீண்டதூரம் பயணிக்கும் விமானங்களை இயக்கும் விமானிகள் விமானத்தை விட்டு இறங்கிவிட்டால் அடுத்து 7 மணி நேர ஓய்வுக்குப் பின்னரே விமானத்தை இயக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸில் விதி உள்ளது. அதுவரை விமானி மீண்டும் விமானத்தில் கூட ஏறக் கூடாது என்கிறது அந்த விதி.
இதனால் அந்த விமானத்தை மாலை 5 மணிக்கு மேல் தான் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இயக்கும். அதற்குள் சென்னையில் இருந்து 5 முறை பெங்களூருக்கு விமானத்தில் போய் வந்துவிடலாம் என்பதால் நொந்து போன பயணிகள், அந்த விமானத்தில் இருந்து இறங்கி பிற விமானங்கள் மூலம் பெங்களூருக்கு கிளம்பிச் சென்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications