மலேசியாவில் கோவில்கள் இடிப்பு-சென்னையில் இந்து முன்னணி, பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னை: மலேசியாவில் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் மலேசிய அரசை கண்டித்து கோஷமிட்டனர். ஆனால், போலீஸ் அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் இல.கணேசன்,
அன்னிய நாடுகள் விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை. நேபாளம், இலங்கை பாகிஸ்தான், மலேசியா நாடுகளில் இந்துக்கள் தாக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசு மெளனமாக இருந்து வருகிறது.
ஆனால் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் விவகாரத்தில் எடுத்துக்கொண்ட அக்கறையில் ஒரு சிறிய அளவு கூட இந்துக்கள் விஷயத்தில் எடுக்கவில்லை. இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications