நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னல் தாக்கி 3 பேர் பலி
திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழைக்கு ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இடி, மின்னல் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
வி.கே.புரம் அனவன் குடியிருப்பைச் சேர்ந்தவர்களான காளிமுத்து, நடராஜன், சுடலை மணி ஆகியோர் அதே குடியிருப்பை சேர்ந்த சிவன் பாண்டியன் என்பவரது வயலில் உழுது கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் உழுது கொணடிருந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதே போன்று வி.கே.புரம் அருகே உள்ள காக்காநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி மகன் வேல்முருகன். இவர் நேற்று காலை தனது தம்பி பாண்டியுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
பின்னர் இருவரும் அங்குள்ள கடனாநதியில் குளிப்பதற்காக சென்றனர். வேல்முருகன் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். தனது அண்ணன் காணாமல் போனது குறித்து பாண்டி கொடுத்த தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமசாமி தலைமையில் வீரர்கள் வேல்முருகன் உடலை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.
இதேபோல் ராதாபுரம் தாலுகா கூட்டபுளியை சேர்ந்தவர் பச்சலி. இவரும் இதே பகுதியை சேர்ந்த ரெபின்டோ, வின்சென்ட் ஆகிய மூன்று பேரும் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஒரு பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது அதிகாலை 5 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் இடி தாக்கியதில் மீன் பிடித்து கொணடிருந்த பச்சலி சம்பவ இடத்திலேயே பலியானார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications