சென்னையில் 5 ஸ்டார் தியேட்டர்
சென்னை: அபிராமி மெகா மால் வளாகத்தில் தமிழகத்தின் முதலாவது 5 ஸ்டார் அந்தஸ்து பெற்ற திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதியுடன் 25 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புரசைவாக்கத்தில், அபிராமி தியேட்டர் வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதி நவீன அபிராமி மெகாமால் உருவாக்கப்பட்டது.
அபிராமி, பால அபிராமி, அன்னை அபிராமி, சக்தி அபிராமி என நான்கு தியேட்டர்கள் இந்த வளாகத்தில் உள்ளது.
இந்த நிலையில் புதிதாக ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற புதிய தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. சுவர்ண சக்தி அபிராமி என இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தியேட்டரை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
320 இருக்கைகளைக் கொண்ட இந்த தியேட்டர் முற்றிலும் குளிரூட்டப்பட்டது. அதி நவீன டிஜிட்டல் ஒலி, ஒளி அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
கோல்டன் கிளாஸ் (டிக்கெட் தலைக்கு ரூ. 120), சில்வர் கிளாஸ் (டிக்கெட் தலைக்கு ரூ. 100), காப்பர் கிளாஸ் (டிக்கெட் தலைக்கு ரூ. 75), ஜனதா கிளாஸ் (டிக்கெட் தலைக்கு ரூ. 10), என நான்கு வகையான இருக்கை வசதிகளைக் கொண்டதாக இந்த தியேட்டர் உள்ளது.
இந்த தியேட்டரின் முக்கிய அம்சம், படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டிருப்பதுதான். இந்த வசதி கொண்ட 25 இருக்கைகள் தியேட்டரில் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழத்தின் முதல் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட தியேட்டர் இதுதான் என்று அபிராமி மெகா மால் உரிமையாளரும், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications