புதுவை: மீனவர்கள் கடும் மோதல்-துப்பாக்கிச் சூடு
புதுச்சேரி:புதுவை அருகே உள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் மீனவர்களின் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் மூண்டது. இதையடுத்து போலீஸார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மோதலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீராம்பட்டினத்தில் உள்ள வடக்குத் தெரு மற்றும் தெற்குத் தெரு ஆகியவற்றில் வசித்து வரும் மீனவர்களுக்கிடையே பெரும் கோஷ்டி மோதல் மூண்டது. இதையடுத்து இரு தரப்பினரும் கடற்கரையில் கூடி கற்களை வீசியும், பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் மோதிக் கொண்டனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்தனர். தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். ஆனால் அப்படியும் அவர்கள் கலையவில்லை. இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது. அதற்கும் கூட்டத்தினர் கட்டுப்படவில்லை.
இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீஸார் மீனவர்களை விரட்டியடித்தனர். இந்த மோதலால் வீராம்பட்டினம் கடற்கரையே போர்க்களம் போலக் காணப்பட்டது.
மோதலில் போலீஸார் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications