ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்
நாகை: நாகையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் தீபாவளியைக் கொண்டாடினார்.
நாகப்பட்டினத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிர், உடமைகளை இழந்தனர்.
சுனாமியில் சிக்கி உயிரிழந்த பலரின் குழந்தைகள் அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்படிப்பட்ட நிலையில் உள்ள 79 குழந்தைகள், சாமந்தான் பேட்டையில் உள்ள அன்னை சத்யா ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்ட கலெக்டர் ஜவஹர் தனது குடும்பத்தாருடன் இங்கு சென்று சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடத் திட்டமிட்டார்.
அதன்படி, தீபாவளி அன்று காலையில் சாமந்தான் பேட்டையில் உள்ள அன்னை சத்யா ஆதரவற்ற இல்லத்திற்கு தனது மனைவி, மகனுடன் சென்ற கலெக்டர் ஜவஹர், அந்த குழந்தைகளை கண்டு தூக்கி வைத்து அன்புடன் நலம் விசாரித்தார்.
பின்பு தான் கொண்டு வந்திருந்திருந்த புத்தாடைகள், இனிப்பு, கார வகைகள், பட்டாசு போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்.
பட்டாசுகளைக் கொடுத்ததோடு இல்லாமல் குழந்தைகளோடு சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதனால் அன்னை சத்யா இல்லக் குழந்தைகள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
ஆதரவற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடியதன் மூலம் மனித நேயத்தை மலர வைத்துளளார் நாகை மாவட்ட கலெக்டர் ஜவஹர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications