கணவனுடன் பைக்கில் சென்ற பெண் விபத்தில் பலி
புதுக்கடை (நெல்லை): நெல்லை மாவட்டம் கருங்கல் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் விபத்தில் சிக்கி பலியானார்.
கருங்கல் அருகே பாலபள்ளம் கொல்லன் வெட்டி விளையைச் சேர்ந்தவர் ஜெபதுரைதாஸ். இவர் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மரியரத்தினம். இவர் அங்குள்ள ஒரு சத்துணவு கூடத்தில் அமைப்பாளராக உள்ளார்.
தினமும் கணவன் பைக்கில் வேலைக்கு கூட்டிக் கொண்டு வருவது வழக்கும். நேற்றும் வழக்கம்போல் கணவருடன் மரியரத்தினம் புறப்பட்டார்.
இருவரும் கருங்கல் அருகே கருமாவிளை என்ற இடத்திற்கு வரும்போது நாகர்கோவிலில் இருந்து வந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் இவர்கள் சென்ற பைக் பின்புறம் இடித்தது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே மரியரத்தினம் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ, மாவட்ட மேற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெபதுரை தாசை நெய்யூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருங்கல் போலீசார் மரியரத்தினம் உடலை கைப்பற்றி குளச்சல் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications