ஹஜ் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான டயர்களில் தீ
ஸ்ரீநகர்: இந்தியன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று காலை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது திடீரென்று டயர்களில் தீப்பிடித்துக் கொண்டது. அதிலிருந்த விமான ஊழியர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டெல்லியிலிருந்து இந்தியன் (முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ்) விமான நிறுவனத்தின் ஏர் பஸ்-300 ரக விமானம் ஸ்ரீநகர் வந்தது. அங்கிருந்து ஹஜ் புனிதப் பயணிகளை செளதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துச் செல்ல இருந்தது. இதனால் அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.
இந்த விமானம் தரையிறங்கும்போது அதன் டயர்கள் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டன. ஆனாலும் விமானத்தை சாதுர்யமாக பத்திரமாக தரையிறக்கினர் விமானிகள்.
இதையடுத்து விமானத்திற்குள் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதையடுத்து விமானத்தின் டயர்கள் மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த விமானம் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் 220 பேருடன் ஜெட்டாவுக்கு கிளம்பிச் செல்ல உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications