செக்ஸ் புகாரில் அதிரடிப்படை எஸ்.ஐ!
சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பெண் போலீஸாரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தர்மபுரியில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஆர்.சரவணன். இவர் வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையில் காவலராக இருந்தவர்.
வீரப்பன் வேட்டைக்குப் பின்னர் அதிரடிப்படையினருக்கு இரட்டை பதவி உயர்வும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. அந்த வகையில், சரவணன் சப் இன்ஸ்பெக்டராக உயர்வு பெற்றார். தர்மபுரியில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சரவணன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நவம்பர் 3ம் தேதி குடிபோதையில் அவர் மாவட்ட கருவூலத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முயன்றார். அவரை அசிங்கமாக பேசித் திட்டியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் எஸ்.ஐ.யை விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் காவலர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் தர்மபுரி போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் சரவணன் தவறு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து பணி காலியிடப் பட்டியலின் கீழ் சரவணனை வைக்க எஸ்.பி. உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications