திருமாவளவன் கட் அவுட்டுக்கு செருப்பு மாலை: தேமுதிகவினர் கைது
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேள்விமங்கலம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவனின் கட் அவுட்டுக்கு செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்ததற்காக தேமுதிகவைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வேள்விமங்கலத்தில் வைக்கப்பட்டிருந்த திருமாவளவன் கட் அவுட்டுக்கு செருப்பு மாலை போடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீஸார், தேமுதிகவினர்தான் இதற்குக் காரணம் என அறிந்தனர்.
இதையடுத்து அக்கட்சியைச் சேர்ந்த மலர்க்கண்ணன், ராமசாமி, வினாயகமூர்த்தி ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் 8 பேரை தேடி வருகின்றனர்.
இதேபோல, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே எழுநூற்றிமங்கலம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் டிஜிட்டல் விளம்பரப் பலகையை சேதப்படுத்தியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications