வீடு புகுந்து போலீஸ்காரர் தாக்குதல் - பொதுமக்கள் சாலை மறியல்!
![]() |
| Click here for more images |
கரூரில் திமுக பிரமுகர் ஒருவரிடம் கார் டிரைவராக இருப்பவர் பழனிசாமி. இவர் நேற்று இரவு 12 மணியளவில் லைட்ஹவுஸ் பாலம் வழியாக கரூர் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து அவரிடம் இருந்த பணம், செல் போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
இது குறித்து அவர் உடனே திமுக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பேரில் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள திருமாநிலையூர் என்ற பகுதிக்கு போலீஸார் சென்றனர். அங்கு பரமத்தி காவல் நிலைய போலீஸ்காரர் வெற்றி என்பவர் சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை அடித்து உதைத்துள்ளார். அதில் கிருஷ்ணமூர்த்தி கால் முறிந்தது.
மேலும், அவரது சகோதரர் கண்ணன், உறவினர் மணிமேகலை ஆகியோரையும் அடித்து உதைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வெற்றி வந்த மோட்டார் சைக்கிளை சிறை பிடித்னர். மேலும் வெற்றியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி இன்று காலை கரூர் - திருச்சி சாலையில், சாலை மறியல் செய்தனர். இனால் அந்த பகுதியில் போகுவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்த பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர். அதன் பின்பு வழக்கம் போல் போக்குவரத்து தொடங்கியது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications