தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலம்: வைகோ-நெடுமாறன் கைது
சென்னை: சென்னையில் இன்று போலீஸ் தடையை மீறி நடத்தப்பட்ட தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவ விமான குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையில் மெளன ஊர்வலம் நடக்கும் என நெடுமாறன் அறிவித்திருந்தார்.
இதில் தானும் பங்கேற்கவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த ஊர்வலத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. இந்நிலையில் தடையை மீறி இந்த ஊர்வலம் நடக்கும் என நெடுமாறன் அறிவிக்கப்பட்டதால், ஊர்வலம் தொடங்கவுள்ள மன்றோ சிலை பகுதியை சுற்றிலும் இன்று காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இன்று பிற்பகலில் இருந்து மதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழர் தேசிய இயக்க தொண்டர்கள் ஏராளமானோர் இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொள்ள மன்றோ சிலை பகுதியில் குவிந்தனர்.
இந்த நிலையில் அறிவித்தபடி மாலை 4 மணியளவில் பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பேரணியைத் தொடங்கினர்.
ஆனால் அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக இந்தப் பேரணி நடக்கவிருந்த புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான தமிழ்ச்செல்வனின் படங்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications