வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசிய தொழிலதிபர் போட்டி- இறுதிச் சுற்றில் சையத் சலாஹூதின்
துபாய்: வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசிய தொழிலதிபரை தேர்வு செய்ய நடந்து வரும் ஆன்லைன் வாக்கெடுப்பில் (ABA ME) தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனங்களின் அதிபருமான சையத் முகம்மத் சலாஹூதின் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கீழக்கரையைச் சேர்ந்த சலாஹூதின் வளைகுடா உள்பட உலகின் 20 நாடுகளில் பரந்து விரிந்துள்ள ஈடிஏ தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக உள்ளார். 5 பில்லியன் டாலர் வர்த்தகத்துடன் 60,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
இந் நிலையில் வளைகுடாவின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய ஆசிய தொழிலபர்கள் யார் என்ற ஆன்லைன் வாக்கெடுப்பில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளார் சலாஹூதின். ஒருமாத காலம் நடந்த இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, நடுவர் குழுவினர் பல்வேறு ஆய்வுகள்-ஆலோசனைகளை நடத்தியும், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் செய்தும் இறுதிச் சுற்றுக்கு தொழிலதிபர்களை தேர்வு செய்துள்ளது.
தொழிலில் அதிக லாபம் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்துறை வெற்றியோடு சமூகத்துக்கு செய்த சேவைகள், நாட்டின் வளர்ச்சிக்கும், தொழிலாளர் முன்னேற்றத்துக்கு செய்த பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதில் வளைகுடாவின் வளர்ச்சிக்கு உதவிய மிகச் சிறந்த ஆசியர் (Outstanding Asian Contribution to the ME Development) மற்றும் மிகச் சிறந்த ஆசிய தொழிலபதிபர் (Asian Business Leader of the Year) ஆகிய பிரிவுகளின் கீழ் இறுதிச் சுற்றுக்கு சையத் சலாஹூதின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து வளைகுடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழரும் தொழில்துறை நிர்வாகியுமான எம்ஜேஎம் இக்பால் கூறுகையில், கூர்மையான தொழில் அறிவும், செய்யும் தொழிலில் நேர்மையும், எளிமையும், தொழிலாளர்களுடன் அன்புடன் பழகும்தன்மையும் வாய்ந்த சலாஹூதின் இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இது இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை என்றார்.
வரும் டிசம்பர் 1ம் தேதி வரை கிடைக்கும் ஆன்லைன் வாக்குகள், எஸ்எம்எஸ்களின் அடிப்படையில் வெற்றியாளர் இறுதி செய்யப்படுவார்.
இந்தியரான சையத் சலாஹூதின் வெல்ல, வாழ்த்தி துணை நிற்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications