பாஜக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு: கெளடா புது முடிவு
பெங்களூர்: எந்த மகனுக்கு துணை முதல்வர் பதவியைத் தருவது என்பதில் ஏற்பட்ட குடும்பக் குழப்பத்தால், கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில், பாஜக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது என்ற முடிவை மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா எடுத்துள்ளார். இதனால் கட்சி உடையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் பாஜக புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. எதியூரப்பா முதல்வாரகியுள்ளார். நேற்று நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவின்போது, மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த யாரும் பதவியேற்கவில்லை.
துணை முதல்வர் பதவி தொடர்பாக கெளடாவின் மகன்களான முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும், ரேவண்ணாவுக்கும் இடையே பனிப்போர் நடப்பதால் கெளடா பெரும் குழப்பத்தில் இருந்து வருகிறார்.
குமாரசாமியை துணை முதல்வராக்க கெளடா ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சி எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ரேவண்ணாவை துணை முதல்வராக்க வேண்டும் என கெளடா குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதனால் கெளடாவுக்கு பெரும் குழப்பமாகி விட்டது. யாரை துணை முதல்வராக்கினாலும், இன்னொரு மகனின் துவேஷத்தை சந்திக்க நேரிடும் என்பதால், இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, பாஜக அமைச்சரவையில் சேருவதில்லை, வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
இதனால் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்களால் கட்சி உடையும் ஆபத்தும் ஏற்பட்டிருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய குழப்பத்தால், வருகிற 23ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது சிக்கல் ஏற்படலாமோ என்ற அச்சத்தில் பாஜகவும் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications