வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்காசி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர், நாயுடு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ரமேஷ். இவருக்கும், திருவனந்தபுரம் நெடுமன் காட்டை சேர்ந்த மணி மகள் லிசாவுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ரமேஷ் எர்ணாகுளத்தில் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கோகுலகிருஷ்ணன் என்ற மகன் உள்ளான். கடந்த வாரம் தீபாவளி கொண்டாட ரமேஷ் வாசுதேவநல்லூர் வந்தார்.
வெளியில் கடைக்கு சென்ற ரமேஷ் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் லிசா தூக்கில் தொங்கியதை கண்டு ரமேஷ் அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து லிஷாவின் அண்ணன் ராபர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது தங்கையின் திருமணத்தின் போது ரூ.50 ஆயிரம் கொடுப்பதாக கூறியிருந்தோம். அதைக் கொடுக்க முடியவில்லை. இதனால் லிசாவை ரமேஷூம், அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் லிசா தற்கொலை செய்து கொண்டதாக நான் சந்தேகிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் லிசா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று தென்காசி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications