விமான டயர் வெடித்தது - இல.கணேசன் உள்ளிட்டோர் தப்பினர்
சென்னை: பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானம், தரையிறங்கும்போது டயர் வெடித்ததால் நிலை தடுமாறி ஓடியது. இருப்பினும் விமானி சாதுர்யமாக விமானத்தை நிறுத்தியதால் அதில் இருந்த பாஜக தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட 54 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூர் சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் இல.கணேசன், நேற்று இரவு கிங்பிஷர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமானத்தில் மொத்தம் 54 பயணிகள் பயணித்தனர்.
விமானம் இரவு எட்டரை மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது. தரையிறங்கியபோது திடீரென பின் பக்க டயர் ஒன்று வெடித்தது. இதனால் விமானம் குலுங்கி நிலை தடுமாறியது. இருப்பினும் விமான சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தி விட்டார்.
விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் குண்டு வெடித்து விட்டதோ என்று பயந்தனர். ஆனால் டயர் வெடித்ததாக விமான ஊழியர்கள் தெளிவுபடுத்தியதால் பீதி அகன்றனர்.
பின்னர் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து விமானத்தின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே இருந்து பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பிறகு பயணிகள் அனைவரும் பாட்டரி கார்கள் மூலம் விமான நிலைய பயணிகள் வருகைப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications