திருச்சி சிறையில் முன்னாள் எம்எல்ஏ உண்ணாவிரதம்!
திருச்சி: திருச்சி சிறையில் முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள ஆவராம்பட்டியில் கடந்த சில வருடங்களாக சுடுகாடு பிரச்சினையால் அங்கு கள்ளர் மற்றும் தேவேந்திரர் சமூகத்தினருக்கு இடையே மோதல் இருந்து வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஊர் குடும்பன் தேர்வு செய்வது வழக்கம். இந் நிலையில் ஊர் கும்பன் தேர்வு செய்வதில் அந்த பகுதி மக்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
கலவரம் வெடித்து இரு சமூகத்தினரும் வெட்டு குத்தில் இறங்கினர். இதனால் இந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. மேலும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தை தாக்கியதாக கூறி முன்னாள் எம்எல்ஏவும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளருமான முருகவேல் ராஜன் மற்றும் 35 ஆண்கள், 23 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்பு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந் நிலையில் தங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ள போலீசாரை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் திருச்சி மத்திய சிறையில் இன்று காலை முதல் முருகவேல் ராஜன் மற்றும் 35 ஆண்கள், 23 பெண்கள் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து கூற சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications