ஏ-380 விமானம் வாங்கும் சவூதி இளவரசர் அல்வாலித்
பாரீஸ்: உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமை கொண்ட ஏர்பஸ் நிறுவனத்தின் சூப்பர் ஜம்போ ஏ-380 விமானத்தை சவூதி இளவரசர் அல்வாலித் பின் தலால் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையை சமீபத்தில் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ-380 விமானம் பெற்றது. இந்த சூப்பர் ஜம்போ விமானத்தை சமீபத்தில்தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாங்கி தனது சேவையை தொடங்கியது.
இந்த நிலையில் முதன் முதலாக இந்த மெகா விமானத்தை தனி நபர் ஒருவர் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளார். அவர்தான் சவூதி இளவரசர் அல்வாலித்.
சில மாதங்களுக்கு முன்பே இந்த விமானத்தை வாங்க ஆர்டர் கொடுத்து விட்டார் அல்வாலித். ஆனால் இவரது பெயரை வெளியிடாமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் ஏர்பஸ் நிறுவனம் அல்வாலித் விமானம் வாங்கப் போகும் தகவலை வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் அல்வாலித்தும் ஒருவர். ஈரோ டிஸ்னி, பல்வேறு ஹோட்டல்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பறக்கும் அரண்மனை என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படும் ஏ-380 விமானத்தை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளார் அல்வாலித்.
இவரிடம் ஏற்கனவே போயிங் 747-400 விமானம் ஒன்று உள்ளது. இதுதான் ஏ-380 வருவதற்கு முன்பு இருந்து வந்த மிகப் பெரிய விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஜம்போ விமானத்தில் 525 பேர் அமர்ந்து செல்ல முடியும். அதேசமயம், சீட்களில் மாற்றம் செய்தால் 800 பேர் வரை பயணிக்கலாம்.
ஒரு சூப்பர் ஜம்போ ஏ-380 விமானத்தின் விலை 300 மில்லியன் டாலர் ஆகும். அதேசமயம் தற்போது அல்வாலித் வாங்கவுள்ள விஐபி விமானத்தின் விலை இதை விட கூடுதலாக இருக்கும் எனத் தெரிகிறது. அந்த விலை விவரத்தை ஏர்பஸ் நிறுவனம் வெளியிடவில்லை.
விஐபி ஏ-380 விமானத்தில் காக்டெய்ல் பார்கள், காசினோக்கள், ஷவர், அதி நவீன படுக்கைகள் உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர டென்னிஸ் கோர்ட் உள்ளிட்ட வேறு பல சிறப்பு வசதிகளும் இடம் பெற்றிருக்கும். மேலும் வாங்குவோரின் விருப்பத்திற்கேற்ற வசதிகளையும் ஏர் பஸ் நிறுவனம் செய்து தரும்.
ஒரு தனி நபர் இந்த சூப்பர் ஜம்போ விமானத்தை வாங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications