சரத்குமார் கட்சியின் கரூர் மா.செ. திடீர் விலகல் !
கரூர்: சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மகேஷ்வரன் திடீரென அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 17 வருடங்ளாக சரத்குமார் ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைவராக இருந்த மகேஷ்வரனை சரத்குமாரே பரிந்துரை செய்து கட்சியின் கரூர் மாவட்ட செயலாளராக நியமித்தார்.
இந் நிலையில் கரூர்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட தலைவர் மகேஷ்வரனுக்கு அழைப்பு அனுப்பவில்லையாம்.
இந்த திருமண நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே சரவணன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் நெடுச்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மகேஷ்வரன் சரத்குமாரிடம் புகார் கூறினாராம். சின்ன பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என சரத்குமார் அறிவுரை கூறியுள்ளார். இதையடுத்து மகேஷ்வரன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கட்சி ஆரம்பித்த சில வாரங்களில் ஒரு மாவட்ட தலைவர் விலகியுள்ளது சரத்குமாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications