'அரிவாள் வெட்டு': குமரி அனந்தன் குழுவிடம் 'மயூரா' ஜெயகுமார் வாக்குமூலம்
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயகுமார் சில நாட்களுக்கு முன் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைத்து வெட்டப்பட்டார்.
இவர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர். இது தொடர்பாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும் எம்எல்ஏவுமான விஷ்ணுபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்படடுள்ளது.
ஜெயக்குமாரை கூலிப் படையோடு வந்து வெட்டிய காங்கிரஸ் கவுன்சிலர் வில்லியம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த தாக்குதல் குறித்து விசாரித்து தலைமைக்கு அறிக்கை தர மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
இந்தக் குழு இன்று விசாரணையை துவக்கியது. முதலில் தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்ட இந்தக் குழு பினனர் சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியது.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மயூரா ஜெயகுமாரிடம் இந்த குழு விசாரணை நடத்தியது. அவர்களிடம் ஜெயக்குமார் பேசுகையில்,
நான் கஷ்டப் பட்டு உழைத்துதான் கட்சியின் இளைஞரணித் தலைவராக உயர்நதேன். தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்த சைதை வில்லியம்ஸ் ஒரு கட்சி நிகழ்ச்சயைக் கூட நடத்தியது இல்லை. ஒரு உறுப்பினர் படிவம் கூட வாங்கியதில்லை.
இதனால் அவர் மீது மேலிடம் நடவடிக்கை எடுத்தது. அவரையும் மேலும் 5 மாவட்ட இளைஞரணித் தலைவர்களையும் நீக்கியது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அதை நான் உடனடியாக பத்திரிகைகளுக்கு வெளியிடவில்லை.
இந் நிலையில் சம்பவத்தன்று நான் சத்தியமூர்த்தி பவனில் உள்ள எனது அறையில் இருந்தபோது சைதை வில்லியம்ஸ், வியாசர்பாடி சரவணன், கோடம்பாக்கம் ஸ்ரீ உள்பட சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சத்தம் போட்டபடி வந்தனர்.
சைதை வில்லியம்ஸ் கழுத்தின் பின்புறம் வைத்திருந்த வீச்சரிவாளை உருவி என்னை வெட்ட வந்தார். நான் விஷ்ணு பிரசாத்திடம் பேசி கொள்ளலாம் என்றேன்.
ஆனால் அவரோ விஷ்ணு பிரசாத் சொல்லித் தான்டா உன்னை வெட்டுகிறேன் என்றப கத்தியபடி வெட்டி னார். அவரோடு இருந்தவர்களும் அரிவாள்களை வைத்து இருந்ததால் கட்சி தொண்டர்கள் யாரும் என்னை காக்க முன் வரவில்லை.
ரத்தம் சொட்ட சொட்ட ஓட நான் தப்பித்தேன். சைதை வில்லியம்ஸ் இது போன்ற தாக்குதலில் ஈடுபட வது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவிலும் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கினார். அப்போது விஷ்ணு பிரசாத் தலையிட்டு அவரை காப்பாற்றினார் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications