வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தமிழர்களுக்காக தனி அமைச்சகம்: எம்எல்ஏ கோரிக்கை
சிதம்பரம்: வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ துரை.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
துபாயில் கட்டுமானப் பணியின்போது நடந்த விபத்தில், காட்டுமன்னார்கோவில் அருகே நத்தமலையைச் சேர்ந்த அருள்மொழி என்பவர் இறந்தார். அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.
இந்தியாவில் செய்யப்படும் நேரடி அன்னிய முதலீட்டை விடவும், இந்தியப் பொருளாதாரத்திற்கு வலுவூட்டுவது வெளிநாடுகளில் வேலைபார்க்கும் இந்தியர்கள் அனுப்பும் சம்பளம் தான்.
வெளிநாடுகளில் இருந்து சம்பளப் பணத்தை பெறுவதில் இந்தியா உலகின் முதல் நாடாக இருப்பதாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களில் கேரளாவுக்கு அடுத்த இடத்தை தமிழகம் பெற்றுள்ளது.
கேரள அரசு அத்தகைய தொழிலாளர் நலனை பாதுகாக்க தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல தமிழகத்திலும் வெளிநாட்டில் வேலைபார்க்கும் தமிழர்களின் நலனை பாதுகாக்க தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications