பழக்கூடை, குப்பைக் கூடையில் திருட்டு விசிடி விற்ற 3 பேர் கைது
சென்னை: சென்னை பர்மா பஜார் மற்றும் மின்ட் பகுதியில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் திருட்டு விசிடிக்களை விற்ற 3 பேர் சிக்கினர். அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட தீபாவளி ரிலீஸ் படங்களின் திருட்டு விசிடிக்கள் குவியல் குவியலாக சிக்கின.
சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பர்மா பஜார் மற்றும் மின்ட் பகுதியில், கடந்த ஒரு வாரமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தீபாவளி ரிலீஸ் படங்களின் திருட்டு விசிடிக்கள் விற்பனைக்கு விடப்படலாம் என்பதால் இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போலீஸ் பிடியில் சையத் முகம்மது (28), ஜாகிர் உசேன் (35) ஆகியோர் வித்தியாசமான முறையில் போலீஸார் கண்ணில் பட்டனர். அவர்கள் இருவரும் பழம் விற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த பழக் கூடையை போலீஸார் சோதனை போட்டபோது அதற்குள் திருட்டு விசிடிக்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல துரை (36) என்பவர் குப்பைக் கூடைக்குள் திருட்டு விசிடிக்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தபோது பிடிபட்டார்.
இவர்கள் மூன்று பேரிடமிருந்தும் 4375 திருட்டு விசிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் மற்றும் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் இந்த ஆண்டு ரூ. 10.34 கோடி மதிப்பிலான திருட்டு விசிடிக்கள் மற்றும் டிவிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனராம்.
கடந்த ஆண்டு ரூ. 1 கோடி மதிப்பிலான திருட்டு விசிடிக்கள், டிவிடிக்களே சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications