ஏர்வாடியில் பலத்த மழை - 500 ஏக்கர் வாழை சேதம்
பணகுடி: ஏர்வாடி அருகே குளம் உடைந்து வயலுக்குள் தண்ணீர் புகுந்ததால் 500 ஏக்கர் வாழை பயிர்கள் நீரில் முழ்கின.
ஏர்வாடி அருகே உள்ளது சிறுமளஞ்சி என்ற திருவேங்கடநாதபுரம். இங்குள்ள பெரிய குளம் கடந்த வாரங்களில் பெய்த பலத்த மழையால் நிரம்பியிருந்தது.
அதன் மடைப்பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு குளத்து நீர் முழுவதும் வயல்களில் பாய்ந்தது.
இக்குளம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. இந்த குளத்து பாசனத்தை நம்பி இப்பகுதியிலுள்ள பல ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு லட்சத்து 80 ஆயிரம் செலவில் இந்த மடையை பொதுபணித்துறை அதிகாரிகள் சரி செய்திருந்தனர்.
இருந்தும் மடை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை முதலே தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. தகவலறிந்ததும் ராதாபுரம் தாசில்தார் திருமணி, பொதுப்பணிதுறை பொறியாளர்கள் காமராஜ், மகாராசன் ஆகியோர் குளப்பகுதிக்கு வந்து மடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நாங்குநேரி தீயணைப்பு நிலைய அதிகாரி சண்முகராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க மணல் மூடைகளை வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குளம் உடைந்ததால் 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்து விட்டன.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications