இந்தியர்களை தாக்கிய ஜெர்மானியர்களுக்கு அபராதம்
பெர்லின்: கிழக்கு ஜெர்மனியில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி இனவெறித் தாக்குதல் தொடர்பாக 2 ஜெர்மானியர்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கிழக்கு ஜெர்மனியில் உள்ள மியூஜென் என்ற நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கண்காட்சியின்போது இந்தியர்கள் மீது 50க்கும் மேற்பட்ட ஜெர்மன் இனவெறியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் ஜெர்மனி இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த இனவெறித் தாக்குதல் தொடர்பாக 2 ஜெர்மானியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஓஸ்சாட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் முறையே 2625 ஈரோ மற்றும் 1500 ஈரோ அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
ஜெர்மனியில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய இனத்தவர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இத்தகைய தாக்குதல்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இனவெறி தொடர்பான குற்றச் செயல்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன.
அதிலும் கிழக்கு ஜெர்மனியில்தான் இத்தகையதாக்குதல்கள் அதிகம் நடைபெறுகின்றன. 1990ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. அதன் பின்னரும் கூட கிழக்கு ஜெர்மனியில் உள்ளூர்வாசிகளுக்கு முறையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஆனால் வெளிநாட்டினர் கணிசமான அளவில் நல்ல வேலைகளில் அமர்வதால் ஆத்திரமடைந்துள்ள கிழக்கு ஜெர்மானியர்கள் இனவெறி வன்முறையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications