3 ஆண்டுகளில் 26% நேரத்தை வீணடித்த எம்.பிக்கள்!
டெல்லி: கூச்சல், குழப்பம், அமளி, வெளிநடப்பு உள்ளிட்டவை மூலம்் கடந்த 3 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் 26% நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
டெல்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிலை என்ற தலைப்பில் சோம்நாத் சாட்டர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் மக்களின் வரிப்பணம் அடங்கியுள்ளது.
ஒரு நிமிடம் வீணானால் அரசுக்கு ரூ. 26,000 பணம் வீணாகிறது. இது அரசின் பணம் அல்ல, மக்களின் வரிப்பணம் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
14வது லோக்சபாவின் கடந்த 3 ஆண்டு கால பணி நேரங்களில் 26 சதவீத நேரம் அமளிகள், வெளிநடப்புகள், கூச்சல், குழப்பங்கள் போன்றவற்றால் வீணடிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எவ்வளவு மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மொத்தம் 73 மணி நேரம் வீணடிக்கப்பட்டது. அடிக்கடி உறுப்பினர்கள் செய்த இடையூறுகளால் இந்த நிலை ஏற்பட்டது.
கடந்த கூட்டத் தொடரின்போது 40 சதவீத நேரம் வீணடிக்கப்பட்டது. ராஜ்யசபாவில் 49 சதவீத நேரம் வீணானது. இந்தக் குழப்பங்கள் காரணமாக நிறைவற்றத் திட்டமிடப்பட்டிருந்த 25 மசோதாக்களில் 11 மட்டுமே நிறைவேறியது.
கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் 124 மணி நேரம் லோக்சபா நடந்தது. ஆனால் இந்த ஆண்டு 65 மணி நேரம் மட்டுமே நடந்தது.
இப்படி மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொள்வதால் எவ்வளவு மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் ரூ. 26,000 மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறோம்.
எதற்கெடுத்தாலும் கூச்சலிடுவது, இடையூறு செய்வது, வெளிநடப்பு செய்வது, சபாநாயகர் இருக்கை முன்பு வந்து கூச்சலிடுவது என்ற நடைமுறை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றார் சாட்டர்ஜி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications