துபாயில் இறந்த 3 தமிழர்களின் உடல்கள் சென்னை வந்தன
சென்னை: துபாயில் பாலம் இடிந்து விழுந்ததில் பலியான 5 தமிழர்களில் 3 பேரின் உடல்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தது.
துபாயில் உள்ள மரினா என்ற இடத்தில் கடந்த 9ம் தேதி பாலம் கட்டும் பணியில் கட்டடத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து 8 இந்தியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
இதில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள். அவர்களின் விபரம்:
மதியழகன் (ஒரத்தநாடு அருகேயுள்ள காவரம்பட்டு), கார்த்தீபன் (திண்டுக்கல் அருகேயுள்ள மூங்கில்பட்டி), அறிவுமொழி (காட்டுமன்னார்கோவில்), ஷாஜகான் மற்றும் கோவிந்தன் (மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி).
இவர்களில் கார்த்தீபன், அறிவுமொழி, மதியழகன் ஆகியோரது உடல்கள் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னைக்கு கொண்டு வரப்பட்டனு.
அவர்களது உறவினர்கள் உடல்களைப் பெற்று ஆம்புலன்ஸ் மூலம் தங்கள் ஊர்களுக்குக் கொண்டு சென்றனர்.
ஷாஜகான் மற்றும் கோவிந்தன் ஆகியோரது உடல்கள் நாளை சென்னை வந்து சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலியோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சத்தை தமிழக அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications