நள்ளிரவில் மில் அதிபர் கொடூர கொலை

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் மில் அதிபர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோட்டைகாடைச் சேர்ந்தவர் யாகப்ப உடையார்(60). இவர் இந்தப் பகுதியில் அரவை மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த மில்லுக்கு அருகிலேயே இவரது வீடு உள்ளது.

இவர் மில் வேலைகளை முடித்துக் கொண்டு அருகில் உள்ள வீட்டில் படுத்து உறங்குவாராம். சம்பவத்தன்று அதே போன்று வேலைகளை முடித்து தனது வீட்டில் போய் தூங்கியுள்ளார்.

அப்போது கதவை உடைத்துக்கொண்டு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை அடித்து உதைத்து, அவரது தலையில் எடைக் கல்லால் அடித்துள்ளனர். இதில் மயக்கமடைந்த அவரை கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதில் யாகப்பஉடையார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

கொலையாளிகள் அவரது உடலை உளுந்து மூட்டைகளுக்கு இடையில் மறைத்து வைத்து விட்டு, அவரது வீட்டிலிருந்து 30 பவுன் நகைகள், ரொக்க பணம் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

இது குறி்த்து தகவல் அறிந்த ஆலங்குடி டிஎஸ்பி மகேந்திரன், இனஸ்பெக்டர் ஜோதிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து இனஸ்பெக்டர் ஜோதிராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+