19ம் தேதி முதல் மயிலை- வேளச்சேரி பறக்கும் ரயில்
சென்னை: மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் போக்குவரத்தை முதல்வர் கருணாநிதி 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னை நகரின் தென் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
முதல் கட்டமாக மயிலாப்பூர் வரை பறக்கும் ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2வது கட்டமாக இந்த ரயில் திருவான்மியூர் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது வேளச்சேரி வரை இந்த போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் திருவான்மியூர் முதல் வேளச்சேரி வரையிலான பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து 2 முறை இந்த பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது போக்குவரத்து இந்த ரயில் பாதை தயாராகி விட்டது.
இதையடுத்து வருகிற 19ம் தேதி முதல்வர் கருணாநிதி இந்தப் புதிய பாதையில் போக்குவரத்ைதத் தொடங்கி வைக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அன்று மாலை 5 மணியளவிலே வேளச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்குகிறார். ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் இனிமேல் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரிக்கு 35 நிமிடங்களில் செல்ல முடியும். இந்த பறக்கும் ரயில் திட்டம், டைடல் பூங்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications