8 மாவட்டங்களில் குழந்தைகள் மறுவாழ்வு இல்லங்கள்
திருநெல்வேலி: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூகநல மேம்பாட்டுத் துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடந்த விழாவில் மனவளர்ச்சி குன்றியோருக்கு பராமரிப்பு உதவித் தொகை அனுமதி ஆணையை அமைச்சர் பூங்கோதை வழங்கிய பின் அவர் பேசியதாவது,
மனவளர்ச்சி குன்றியவருக்கு உதவிகள் செய்யும் நிகழ்ச்சிகள் மன நிறைவை தருகிறது. மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று எண்ணி பார்க்க வேண்டும்.
கை, கால் ஊனமுற்றோர் தனது நிலையை உணர முடியும். ஆனால் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தங்கள் நிலையை உணராதவர்கள். தற்போது உதவித் தொகை ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 31,000 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த பெருமை முதலமைச்சர் கருணாநிதி அவர்களைத் தான் சேரும்.
ஊனமுற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்கள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நெல்லை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்பட 8 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்படுகிறது. இந்த மையத்துக்காக ரூ.25 கோடி செலவு செய்யப்படுகிறது என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications