சைதை வில்லியம்ஸ் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த 11ம் தேதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்டார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், எம்.எல்.ஏவுமான விஷ்ணுபிராசாத் உட்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பிரசாத்தின் ஆதரவாளரும், ஜெயக்குமாரால் பதவி நீக்கப்பட்டவருமான சைதை வில்லியம்ஸ் மற்றும் மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சைதை வில்லியம்ஸ் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் ஒரு அப்பாவி. போலீசார் தவறாக என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதனால் எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சைதை வில்லியம்சுக்கு ஜாமீன் கொடுத்தால் அவர் வழக்கு குறித்த ஆவணங்களை அழிக்க முயற்சி செய்வார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
இந்த வழக்கின் முதல் குற்றவாளி விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை கைது செய்ய 2 வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications