அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
திருவள்ளூர்: அதிமுக பிரமுகர் அம்பத்தூர் ரவி படுகொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் தப்பி ஓடிவிட்டார்.
சென்னை அம்பத்தூர் நகர அதிமுக செயலாளராக இருந்தவர் எம்.ஆர்.ரவி. ரியல் எஸ்டேட் பிசினஸையும் செய்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்த ரவி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், முகப்பேர் ஏ.ராஜா உள்ளிட்ட 12 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
முக்கியக் குற்றவாளியான ராஜா முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிமூலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா தப்பி ஓட்டம்:
இந் நிலையில் ராஜா உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் இந்த வழக்கு தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதற்கிடையில் ராஜா தனக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த ராஜா தப்பிவிட்டார். ராஜாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications