நிலத்தகராறில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக் கொலை!
மதுரை: மதுரை அருகே நிலத்தகராறில் அரசுப் போக்குவரத்துக்கழக டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை அருகேயுள்ள கள்ளந்திரி தொப்புலாம்பட்டியில் வசிப்பவர் ராஜா(28). இவர் மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராஜாவின் சித்தப்பா மகன்கள் ரவிச்சந்திரன், இளையராஜா, அழகேந்திரன் ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் சமாதானம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அப்பன் திருப்பதி என்ற பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று ரவிச்சந்திரன், இளையராஜா, அழகேந்திரன், ராஜா ஆகியோர் சென்று மது அருந்தி உள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே குடிபோதையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ராஜாவை அவரின் சித்தப்பா மகன்கள் மூவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது அருகிலிருந்தவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்து ராஜா கொலையானதை பார்த்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து ஊமச்சிகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுலைமானுக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை கண்டு படிக்க தனிப்படை அமைக்கப்படடுள்ளது. டிரைவர் ராஜா படு கொலையால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications