வங்கியில் கள்ளநோட்டு தந்த நாதஸ்வர வித்வான் கைது
நாகர்கோவில்: அடகு வைத்த நகையை மீட்பதற்காக கள்ளநோட்டை வங்கியில் செலுத்த முயன்ற நாதஸ்வர வித்வானை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் அருகேயுள்ள பண்டார தோப்புப் பகுதியை சேர்ந்தவர் சத்யா. நாதஸ்வர கலைஞரான இவர் தனது நகையை பார்வதிபுரத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு அடகு வைத்திருந்தார்.
அடகு வைத்த நகையை திருப்புவதற்காக சத்யா பணத்துடன் வங்கிக்கு சென்றார். வங்கியில் பணத்தை செலுத்த முயற்சிக்கையில் சத்யா கொண்டு வந்த ரூபாய் நோட்டுகள் மீது வங்கி ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு மேலாளரிடம் காட்டி தனது சந்தேகத்தைக் கூறினார்.
வங்கி மேலாளருக்கும் சத்யா கொண்டு வந்த ரூபாய் நோட்டுகள் மீது சந்தேகம் வரவே அவர் மற்றொரு வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு விசாரித்தார். முடிவில் சத்யா கொண்டு வந்த பணத்தில் 500 ரூபாய் தவிர மீதியிருந்த ரூ.12,000 கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
சத்யாவிடம் கள்ள நோட்டுகள் எப்படி வந்தது, கள்ளநோட்டு கும்பலுடன் சத்யாவுக்கு தொடர்பு உண்டா, அவர் அப்பாவியா என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications