உண்ணாவிரதம் இருந்த 18 கைதிகள் மருத்துவமனையில்
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளரை மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் 18 பேர் இன்று மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜெயகாந்தனை மாற்றக் கோரி கடந்த நாட்களாக கைதிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் பலர் மயக்கமடைந்து விழுந்தனர்.
மயக்கமடைந்த கைதிகளை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கைதிகள் மயக்கமடைந்த தகவல் கிடைத்து, அந்த கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது.
இதனையடுத்து எஸ்.பி. சாயாசர்மா தர்ணா போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து சிறைக்குள் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மேலும் சில கைதிகள் மயக்கமடைந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார்.
மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு 18 கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஜம்பு, ரவி ஆகிய 2 பேருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.
சிகிச்சை பெற்றுவரும் கைதிகள் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிடக்கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காவல்துறை உயரதிகாரிகள் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரச முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications