குஜராத் தேர்தல்: எஸ்.எம்.எஸ். பிரசாரத்திற்குத் தடை
டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரங்களுக்கு முன்பு எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் பொதுத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் நேற்று டெல்லிக்கு வரவழைத்து அவர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்குப் பின்னர் கோபாலசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரங்களுக்கு முன்பு எந்த வகையான பிரசாரத்திலும் ஈடுபடக் கூடாது. எனவே எஸ்.எம்.எஸ். மூலமும் பிரசாரம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக் கூடாது.
வேட்பாளர்களோ, கட்சியினரோ, கட்சித் தொண்டர்களோ, அல்லது கட்சிக்கு ஆதரவாகவோ வாக்காளர்களுக்கு யாரும் எஸ்.எம்.எஸ். அனுப்பக் கூடாது. அப்படி அனுப்புவோர் மீது தேர்தல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இந்தியாவில் எஸ்.எம்.எஸ். பிரசாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications